search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசிகர் தற்கொலை"

    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அணி தோற்ற விரக்தியில் வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்ட கேரள வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #FIFA2018 #LionelMessi #Argentina #KeralaFanSuicide

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது. 

    இதனால் மனமுடைந்த அலெக்ஸ் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 


    தற்கொலை செய்துகொண்ட தினு அலெக்ஸ்

    இது குறித்து பேசிய அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுனர். அதற்காக மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய் அலெக்ஸ் வீட்டின் அருகே உள்ள ஆறுவரை சென்று நின்றுவிட்டது. இதனால் அவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்பட்டது.

    இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் இருந்து அலெக்சின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் குதித்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடலை மீட்புப்படையினர் கண்டெடுத்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    கால்பந்து போட்டியில் மெஸ்சி அணி தோற்ற விரக்தியில் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்திகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #FIFA2018 #LionelMessi #Argentina #KeralaFanSuicide
    ×